கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஆல்யா, அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ தொடரில் நடித்தார். இந்த தொடரில் நடித்ததின் மூலம் இவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உருவாகினர். அந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த, சஞ்சீவுடன் இவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் சின்னத்திரை தொடரில் இருந்து விலகியிருந்த ஆல்யா 1 வருடம் கழித்து மீண்டும் நடித்தார். தற்போது அவர் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை அண்மையில் ஆல்யாவின் கணவர் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் ஆல்யா இது குறித்து எதுவும் கூறாத நிலையில், அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் வந்த லைவில் ஒரு ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா எனக் கெட்டதற்கு தலையை ஆட்டி ஆமாம் என்றார். அதனால் ஆல்யா கர்ப்பமாக இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் ராஜா ராணி -2 சீரியலில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.