பாலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி ஹாலிவுட் வரை பயணித்து இந்தியாவின் பிரபல நடிகையாக விளங்குபவர் அலியா பட் (Alia Bhatt).


தேசிய விருது, டாப் நடிகை


சென்ற ஆண்டு கங்குபாய் கத்தியாவாடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அலியா பட் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார். மற்றொருபுறம் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்து பிரபல நடிகை கால் கேடோட் உடன் திரையைப் பகிர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளினார்.


பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் உடனான திருமணம், அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைக்கு தாயானது என தன் தனிப்பட்ட மகிழ்ச்சியாக வலம் வரும் அலியா பட், சினிமாவிலும் தொடர்ந்து டாப் நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் நடிகை அலியா பட் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் டைம்ஸ் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்கள் என்ற பட்டியலை நேற்று பகிர்ந்தது.


டைம்ஸ் இதழின் பட்டியல்




இந்தப் பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு  எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உலக அளவில் கவனமீர்த்த மல்யுத்த வீராங்கனையுமான சாக்‌ஷி மாலிக் இடம்பெற்றுள்ளார்.  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் நிறுவனர் சத்யா நாதெள்ளா, இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட நடிகர் தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவக நிறுவனரான அஸ்மா கான், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். 


அலியா பட் ரசிகர்கள் உற்சாகம்


இந்நிலையில், நடிகை அலியா பட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். நடிகை அலியா பட் பற்றி பகிர்ந்துகொண்ட ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ இயக்குநர் டாம் ஹார்ப்பர், “அலியா பட், உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல, அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் அவரது பணிக்காக பிரபலமானவர். தொழிலதிபர், சர்வதேச நட்சத்திரம்”  எனப் புகழ்ந்துள்ளார். உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் அலியா பட் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Yuvan Shankar Raja: விசில் போடு பாடலுக்கு ரசிகர்கள் கலாய்த்தது காரணமா? இன்ஸ்டாவில் இருந்து வெளியேறிய யுவன்..


Vadakkan Movie Brussels : பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!