நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'காக்கா முட்டை'. இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடைய நடிப்பை பலரும் பாராட்டினர். இப்படத்திற்கு சுமார் 8.6 கோடி ரூபாய் வரை வசூல் கிடைத்தது. மேலும் இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகிய 6-வது ஆண்டை நினைவுகூறும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,"கால சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது. சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் எனது வாழ்வில் மறக்கமுடியாது ஒன்று. அது எப்போதும் என் மனதுக்கு அருகில் இருக்கும் திரைப்படம். இது பல தடைகளை உடைத்தது. அத்துடன் என்னுடைய சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்த அந்த இரண்டு சிறுவர்களையும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் இது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் மட்டுமல்ல அப்படி நிஜ வாழ்க்கையில் இருக்கும் கதாபாத்திரங்களின் வெற்றியையும் இந்தப் படம் தாங்கியுள்ளது என்றும் சில பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக,
இவ்வாறு பலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Family Man 2 | வரலாற்றை கொச்சைப்படுத்தியது Family Man 2 : கொதித்த பிரபல இயக்குநர்!