நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பு குறித்து  விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்தார். 


அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி ஹீரோயினாக உள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அவர் நடிப்பில், கடந்த வாரம் ஃபர்ஹானா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில், தெலுங்கு திரையுலகில் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். சொல்லப்போனால் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை காட்டிலும் நான் நடித்திருந்தால்  நன்றாக பொருந்தி இருப்பேன்’ என தெரிவித்தார். 


ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானதோடு கடும் விமர்சனத்தையும் பெற்றது. குறிப்பாக ராஷ்மிகாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளித்தனர். இப்படியான நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அன்பிற்குரிய நண்பர்களே, நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.


என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது.


இதற்கு பதிலளிக்கையில், " எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் 'என பதிலளித்தேன்.இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.