அதிதி..


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர். 






இந்நிலையில்தான் ஷங்கரின் மகள் அதிதி, முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதிதி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, அதில் செம்ம கியூட்டாக பாவாடை தாவணி அழகில் மின்னினார். இந்த ஒற்றை புகைப்படத்திலேயே... ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.


இதை தொடர்ந்து அவ்வப்போது இந்த படத்தில் நடிக்கும், இவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியானது. 'விருமன்' படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம் அதிதி. அவர் ஷூட்டிங்கில் மதுரை தமிழில் சொல்லி கொடுத்தது போல் பேசி அசால்ட் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. 


க்ரஷ் யார்?


இந்நிலையில் தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ள அதிதிக்கு திரையுலகில் உங்களது க்ரஷ் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இணைய உலகில் ட்ரெண்டாகி வருகிறது. ஏனென்றால் பிடித்த ஹீரோ என அதிதி கைகாட்டியது தமிழ்த்திரையுலகிலேயே இல்லாத ஒருவர். கன்னட ஹீரோவான யஷ் தான் தனக்கு பிடித்த ஹீரோ எனக் கூறியுள்ளார் அதிதி. 






கேஜிஎப் படத்தில் நடித்தப்பிறகு தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் யஷ். இந்த நிலையில் யஷ்தான் க்ரஷ் என அதிதி கூறியுள்ளது ராக்கி பாயின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது