காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைந்து குணமடைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


சமீபகாலமாக கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரமாக களமிறங்கியுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். டெல்லி ராஜ்காட்டில் நேற்று நடைபெற்ற நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் இருந்து டெல்லி வரையிலான பேரணியின் நிறைவு விழாவில் அவர் கலந்து கொண்டார்.  


அதேசமயம் சோனியாவுக்கும், அவரது மகனும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில் தான் சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது உத்தரப் பிரதேச பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், மகன் ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.






இதற்கிடையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா நோயிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 






மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சோனியா காந்தி விரைந்து குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தொற்று இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண