நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  ‘மாவீரன்’ படத்தின் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


 






சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்து தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது  மோஸ்ட் வாண்டட் நடிகராக உள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டுள்ள சிவகார்த்திகேயன் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்திருந்தார்.


இந்தப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிவரும் பிரின்ஸ் படத்தில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் கைவசம், அயலான், மாவீரன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மாவீரன் படத்தை  ‘மண்டேலா’ புகழ்  மடோன் அஷ்வின் இயக்குகிறார்.





இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


முன்னதாக, இவர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.