கத்ரினா கைஃப் :


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரினா கைஃப் . இவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கத்ரினா கைஃப் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது நாம் அறிந்ததே ! . சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் கத்ரினா , தனது ஃபேஷன் சென்ஸை வெளிப்படுத்தும் அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  அதை காணவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.







ஒரு டிரஸ் விலை இவ்வளவா?


இந்த நிலையில் கத்ரினா கைஃப் BTS வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது அவர் ஃபோட்டோ ஷூட் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ. அதில் கருப்பு வெள்ளை என இரு நிறங்களில் கோடுகள் அடங்கிய ஷார்ட் டிரஸ்ஸை அணிந்திருக்கிறார். அந்த ஆடை பலரது கவனத்தை வெகுவாக  கவர்ந்திருக்கிறது. அந்த ஆடை Monse Maison என்னும்  பிராண்டை சேர்ந்தது. இது கேஸ்கேட் ஷர்ட் டிரஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை வாங்க நீங்கள் விரும்பினால் தாராளமாக இந்த இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை 1,390 அமெரிக்க டாலர்கள் . இந்திய ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமானால் 1,09,726 ரூபாய்தான்.







மூவி அப்டேட் :


கத்ரினா கைஃப் தற்போது ஃபோன் பூத் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 2 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிருஸ்துமஸ் ‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.