Aditi shankar: கல்லூரிக்கு சென்று அஜித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்...வைரல் வீடியோ உள்ளே

விருமன் படத்தை தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். 

Continues below advertisement

நடிகை அதிதி ஷங்கர் அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் மருத்துவம் படித்தவர். இவர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அறிமுகப்படம் என்பது போல இல்லாமல் அதிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தனர். 

இந்த படத்தில் அதிதி மதுர வீரன் பாடலை இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பாடியிருந்தார்.ஆனால் இந்த பாடல் முதலில் ராஜலட்சுமி செந்தில் கணேஷை வைத்து பதிவு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் இதற்கு உடனடியாக ராஜலட்சுமி விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விருமன் படத்தை தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில் அதிதி தான் படித்த ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற நிலையில், அங்கு அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “இன்று மீண்டும் கல்லூரிக்கு சென்றேன்! ஆனால் மாணவனாக அல்ல... தலைமை விருந்தினராக...அவ்ளோ தூரம் போயிட்டு... ரெண்டு ஸ்டெப் போடாம வந்திருவோமா?” என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola