கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை  வகித்தார்கள். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை கிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை ) நடைபெறுகிறது.




இந்த புத்தக திருவிழாவை எங்கே நடத்தலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் ஆலோசனை செய்த பொழுது, முதலில் தேர்வு செய்த இடம் இந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள திருமாநிலையூர் பகுதி. இந்த இடத்தை தேர்வு செய்த பொழுது அதிகமான அரங்குகள் நாம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் இங்கு எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் அமைய வேண்டும். இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த இடத்தை தேர்வு செய்து, அதற்கான முழு வடிவமைப்பையும் செய்து இருக்கின்றார்கள். கரூர் மாவட்டத்தினுடைய வரலாற்றில், கரூர் மண்ணின் உடைய வரலாற்றில் இந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான புத்தக திருவிழா நடைபெறும் என்று சொன்னால் அதற்கு முதலில் அரசினுடைய நிதிகளையும் வழங்கி அதற்கான அரசாணைகளையும் வெளியிட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மிக பிரம்மாண்டமாக உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அவர் வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மதுரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  பெயரில், மிக பிரம்மாண்டமான நூலகத்தை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களது திருக்காரங்களால் திறக்கப்பட உள்ளது. 




 


ஒரு அரசு என்பது வெறுமனே திட்டங்களை மட்டும் வழங்கக்கூடிய அரசாக மட்டுமல்லாது, திட்டங்களோடு சேர்த்து மக்களுக்கு தேவையான குறிப்பாக, வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க கூடிய வகையில் தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகத் திருவிழா எழுச்சியோடு நடைபெறுவதற்குரிய அரசாணை நிதிகளையும் தந்த முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை பணிவோடு சமர்ப்பித்து, நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியானது இன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் நிகழ்ச்சியோடு வடிவமைக்கக்கூடிய குறிப்பாக,115 அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்த அரங்குகளில் இடம் பெற்றிருக்கும் நூல்களை நாம் பார்க்கும் பொழுது இன்னும் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் இந்த அரங்கில் பயணித்தால் தான் ஒட்டுமொத்த புத்தகத்தையும் நம்மால் பார்க்க முடியும் என்ற அளவிற்கு நூல்கள் பெற்று இருக்கின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்லக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை நம்முடைய மாவட்ட மக்கள், அனைத்து மாணவ செல்வங்கள் மகிழ்ச்சியோடு பயன்பெறக்கூடிய வகையில் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. 


சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து,  தமிழகத்தின் முதல்வர் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார்கள். குறிப்பாக நாம் இந்த புத்தகத் விழாவை நடத்திக் கொண்டிருக்கும், இந்த நிகழ்ச்சி நிறைவு விழா முடிந்த பிறகு மிக விரைவாக இரண்டு ஒரு நாட்களில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி குறிப்பாக உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றத்தின் உடைய படிக்கட்டுகளை ஏறி சட்டப் போராட்டம் நடத்தி இறுதியாக இந்த இடத்தினை, தமிழகத்தின் உடைய ஒப்பற்ற முதல்வர் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நட நிறைவு செய்தார்கள்.  




விரைவில் இரண்டு ஒரு நாட்களில் புத்தகத் திருவிழா நிறைவு பெற்ற பிறகு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க இருக்கும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த அரசு அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா நம் நம்முடைய முதல்வர் அறிவித்த புதிய அரங்கு ஒன்றில் புத்தகத் திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்து நடத்தப்படும். மேலும், சிஐஐ அமைப்போடு மற்றும் அனைத்து தொழில் முனைவர்களும் சேர்ந்து அதற்கான அரங்குகள் விரைவாக அமைக்கப்படும்” எனக் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்,  துணை மேயர் சரவணன், மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டயுதபாணி, தனி துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன்,  மண்டல தலைவர்கள் சக்திவேல், கனகராஜ், , அன்பரசு, ராஜா, மாமன்ற உறுப்பினர் வாசுமதி, மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.