திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


தன் கணவர் நாக சைதான்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சமந்தா , சமீப காலமாக அதனை தவிர்த்துவிட்டார். இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக திரையுலகில் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. முன்னரே செய்திகள் வந்தபோது அதனை இருவரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் இருவருக்கும் இடையே நிகழ்ந்த அடுத்தடுத்த சம்பவங்கள் இருவரும் பிரிந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் இருந்தன.


சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்திருந்தார். ஆனால் தனது பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற பெயரை சமீபத்தில் மாற்றினார். தனது பெயரையே நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார்.


லால் சிங் சத்தா படத்தின் புரமோஷனில் கலந்துக்கொள்வதற்காக மும்பை சென்ற நாக சைத்தன்யாவிற்கு, அமீர்கான் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்து கொடுத்துள்ளார். அப்போது படக்குழுவுடன் இணைந்து நாகசைத்தன்யா கேக் வெட்டி கொண்டாடினார்ர். அதில் நாகர்ஜூனா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இடம்பெற்ற நிலையில் சமந்தா பங்கேற்கவில்லை.


கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி  பிறந்தநாள் கொண்டாடிய நாகர்ஜூனாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நடிகை சமந்தா கலந்து கொள்ளாததும், நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றபோது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர்,  "கோவிலுக்கு வந்து இதை  கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டதும் விவாகரத்து ஆகப்போகிறதென்ற செய்திகளுக்கு வலு சேர்த்தன.


சைதன்யா சாய் பல்லவியுடன் நடித்த லவ் ஸ்டோரி படம் ஹிட் ஆனதை தொடர்ந்து. பாலிவுட் நடிகரும், நாக சைதன்யாவின் லால் சிங் சத்தாவில் அவருடன் நடிக்கும் நடிகருமான அமீர்கான் சமீபத்தில் படத்தின் விளம்பர பணிகளுக்காக ஐதராபாத் சென்றார். நாக சைதன்யாவும் அவரது தந்தை நாகார்ஜுனாவும், அமீர்கானுக்கு இரவு விருந்து அளித்தனர். இந்த இரவு உணவு விருந்தின் பல படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அதில் சமந்தா இல்லாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமந்தா, இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டார்கள் என்ற வதந்தியை இந்த விருந்து மேலும் பெரிதாக்கியுள்ளது.  நாக சைத்தன்யா‘லவ் ஸ்டோரி’ தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது சமந்தா குறித்து கேட்ட கேள்விக்கு ’நான் இங்கு படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளேன் ! படம் குறித்த கேள்வியை மட்டுமே கேளுங்கள் ‘ என காட்டமாக தெரிவித்தார்.


மேலும் ஒரு சமீபத்திய பேட்டியில், சமந்தாவை பிரிகிறாரா என சைதன்யாவிடம் (Naga Chaitanya) கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவும், தொழில் வாழ்க்கையை தொழில் ரீதியாகவும் வைத்திருக்கிறேன். நான் இரண்டையும் கலந்ததில்லை. நான் வளரும்போது என் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டது இந்த பழக்கம். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் வேலையைப் பற்றி பேசியது இல்லை. வேலைக்குச் சென்றபோது, ​​தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியதில்லை என்று கூறியிருந்தார்.


மேலும் இதற்கெல்லாம் காரணம் சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகர்ஜூனாதான் என கூறப்படுகிறது. முன்னதாக சமந்தா கிளாமராக நிறைய  ஃபோட்டோஷூட் செய்வது நாக சைத்தன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். அப்போதே சமந்தாவிற்கும் குடும்பத்தினருக்குமிடையில் மனவருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியான ஃபேமிலி மேன் தொடரில் , போல்டாக சில காட்சிகளில் நடித்திருந்தார் சமந்தா. அதனை பலர் பாராட்டினாலும் நாகர்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லையாம். இந்நிலையில் முன்னதாக இருந்த பிரச்சனை கூடுதலாக புகைய தொடங்கவே, இது சமந்தாவிற்கும் நாக சைத்தன்யாவிற்குமிடையில் கூடுதல் விரிசலை ஏற்படுத்தி விவாகரத்துவரை சென்று விட்டது என சில டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன..



சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.


இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 4 ,5 முறை பேச்சு வார்த்தை நடத்தியதாம் குடும்ப நல நீதிமன்றம். ஆனால் இருவரும் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பதாகவும் , பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றும்  தெலுங்கு மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.


இச்சூழலில் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் விவாகரத்து செய்யப்போவதாக தற்போது  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.