சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் மனோபாலா பேசியிருக்கிறார்.


இது குறித்து சாய் வித் சித்ரா யூடியூப் சேனலுக்கு மனோபாலா பேசும் போது, “ கஜினி நான் தயாரிக்க வேண்டிய படம் அது போச்சு.. நந்தலாலாவும், ராஜா ராணியும் முதலில் நான் தான் தயாரிப்பதாக இருந்துச்சு.. அதுவும் போச்சு.. 


என்னன்ணு கேட்டா பெரிய பேனர் வேணும்ணு கேக்குறாங்க.. அதுக்கப்புறம்தான் நல்ல கதை  இருந்தா நல்ல பேனர் வரும் அப்படிங்கிறத புரிஞ்சுக்கிட்டேன். ஒரு நாள் நானும் இயக்குநர் நலன்குமாரசாமியும் பேசிட்டு இருந்தப்போ.. நலன்கிட்ட நல்ல கதை இருக்கிற பையன் யாரும் இருந்தா சொல்லுப்பா.. அப்படினு கேட்டேன்.. அவரு வினோத்த அனுப்பி வைச்சாரு.. வினோத் சதுரங்க வேட்டை கதை சொன்னதும் ரொம்ப பிடிச்சுருச்சு.. 25 பேரோட போனான் வினோத்... முதல் எபிசோட எடுத்துட்டு வந்து போட்டு காட்டினான்.. சும்மா அப்படி இருந்துச்சு.. அதுக்கப்புறம் லிங்குசாமி அந்தப்படத்த வாங்குனாரு.. எல்லா ஏரியாவுலையும் படம் நல்ல ரீச் ஆச்சு.. 





சதுரங்க வேட்டை 2 படத்தின் கதை, வசனம் வினோத் உடையதுதான். சலீம் படத்தோட டைரக்டர் நிர்மல் குமார்தான் படத்தை இயக்கி இருக்கிறார்.


“ ஒண்ணு நீங்க புரிஞ்சிக்கணும்.. நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய வித்தை காரன் கிடையாது.. நான் வெள்ளந்தியான ஆளு.. எல்லாத்தையும் நம்பிருவேன். ஒருத்தன் 2 கோடி ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்த உடனே, படத்தை நான் கொடுத்துட்டேன். அதற்கு பிறகு பணத்தை அவரால பிரட்ட முடியாமால் போக, படம் லாக்காச்சு. சென்சாருக்காக ஒரு டப்பிங் வாய்ஸ போடுங்க.. போடுங்க.. அப்படிணு இவன் கொடுத்த ப்ரஷ்ஷர்ல, டம்மி வாய்ஸ போட்ட உடனே அரவிந்த் சாமி, என் வாய்ஸ மாத்துறாங்க அப்படிணு தப்பா எடுத்துக்க கூடிய சூழ்நிலை வந்துருச்சு..


உண்மையில அரவிந்த்சாமி வாய்ஸ யாராவது மாத்துவாங்களா...  புரிதல் இல்லாம அது சொல்றதுக்கு கூட அவர் எனக்கு நேரம் தரல.. அதனாலத்தான் எனக்கு அவருக்கும் ஒரு கருத்துவேறு பாடு வந்துருச்சு.. அது சரியாகிரும். அவரோட முழுமையான பணத்தை நான் கொடுக்கும் போது பழைய நட்பு வந்துரும். சின்ன வயசுல என்னோட அம்மா இறந்தப்ப, அவரோட அப்பாதான் என்ன கூட்டிட்டு வந்து, உங்க அம்மா வானத்துக்கு போயிட்டாங்க அப்படிணு சொன்னாரு.. அதுக்கப்புறதான் நான் அழ ஆரம்பிச்சேன். எங்களுக்குள்ளே அப்படி ஒரு உறவு இருக்கு” என்றார்.