தென்னிந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறியப்படுபவர் அனிருத். இளம் வயதிலேயே இசையை கெரியராக தேர்வு செய்து கலக்கி வருகிறார். முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் , அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். வணக்கம் சென்னை ஆல்பம் பாடல் இன்றளவும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த பாடல் வெளியான சமயத்தில் அனிருத்தின் தந்தையும் , பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகருமான ரவி ராகவேந்திரா அனிருத் குறித்த சில சுவாரஸ்யங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.  அதில் “ என் மகன் அனிருத்த நினைத்து ஏதாவது ஒரு தருணத்தில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவன் வெற்றி ஒரு நல்ல வெற்றிதான். இப்போதான் கெரியரை ஆரமித்திருக்கிறான். இளைஞர்களுடன் நல்ல ஒரு கணெக்ட் இருப்பதாக நினைக்கிறேன்.  எனக்கு அவன் இசை மிகவும் பிடிக்கும். அவன் பாட்டு எல்லாமே ரொம்ப வித்தியாசமாக , புதுமையாக இருக்கிறது.அதனாலதான் இளைஞர்களின் பல்ஸை அவனால் பிடிக்க முடிந்திருக்கிறது.




நான் எல்லாம் இசையில் அவருக்கு அறிவுறை கூற முடியாது. இசை என்பது அவர்களுக்குள்ளாக இருந்து வரக்கூடியது. எனக்கு இசையமைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறார்கள் என்ற கேள்வி இருந்திருக்கிறது. ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன் சாரிடம் இந்த கேள்வியை கேட்டேன். எப்படி சார் இதற்கு அடுத்து புல்லாங்குழல் , இதற்கு அடுத்து வயலின் என கேட்டேன்.. அதெல்லாம் அவர்களின் படைப்பு திறமை. இசையமைப்பாளராக மாறுவது கடவுள் கொடுத்த வரம் . ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய இசை ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு 15 -20 வருடங்களுக்கும் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றங்களை கண்டிருக்கிறது. அது நடிப்பாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் காமெடியாக இருந்தாலும். அதற்கு காரணம் தலைமுறைகள் மாறுவதுதான். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த தலைமுறைக்கு அனிருத்தின் இசை பிடித்திருக்கிறது. இசையை பொருத்தவரை நான் எதுவும் அனிருத்திற்கு சொல்ல முடியாது. இருந்தாலும் இசைக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை தேர்வு செய்து வருங்காலங்களில் பணியாற்ற வேண்டும் , அதுதான் அவன் திறமையை முழுமையாக வெளியே கொண்டுவரும்  .” என்னும் அனிருத் தந்தை சிறுவயதில் இருந்தே அனிருத்திற்கு இசை மீது ஆர்வம் இருந்தாக தெரிவிக்கிறார்.


 






” நான்கு வயதில் இருந்தே கீ-போர்டு வாசித்து வருகிறார் அனிருத். கர்நாடக சங்கீதமெல்லாம் அனிருத் கற்றுக்கொள்ளவில்லை. பள்ளி - கல்லூரிகளில் இவருக்கென தனி பேண்ட் இருந்தது. அதன் தலைவர் அனிருத்தான். எல்லா போட்டிகளிலும் பரிசுகளை பெறுவார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்திய அளவிலான இசை போட்டியில் பங்கேற்ற அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் கையில் இருந்து கீ-போர்ட் ஒன்றினை பரிசாக வாங்கினார் . கடவுள் மற்றும் இசைப்பிரியர்களின் ஆசிர்வாதத்தால் அவர் நல்ல நிலைக்கு வர வாழ்த்துகிறேன் “ என பெருமிதமாக தெரிவித்துள்ளார் ரவி ராகவேந்திரா.