திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக உள்ளது பழனி முருகன் கோவில், தமிழ்கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த திருவிழாவை தொடர்ந்து தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.



பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபுசாமி தரிசனம்  - பக்தர்கள் கூடியதால் பரபரப்பு


அதேபோல பிரபல சினிமா நடிகர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம்,  என பல்வேறு திரைபிரபலங்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவில் வந்துள்ளார்.


செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக




LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!


இதனை தொடர்ந்து நேற்று பழனி முருகன் கோவிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலையடி வாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தார். மலைக் கோயிலில் ஐந்து இடங்களில் விளக்கு ஏற்றி மனமுருக தரிசனம் செய்தார். யோகி பாபு நடிப்பில் உருவாக உள்ள  இரண்டு படங்களுக்கான கதையை சாமி பாதத்தில் வைத்து வழிபாடு செய்தார். யோகிபாபு மலைக் கோயிலுக்கு வருகை தந்ததை அறிந்த பக்தர்கள் பலரும் முந்தி அடித்து புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் மலைக் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். பின்னர் மலையடிவாரத்திற்கு வந்த யோகிபாபு பேட்டரி கார் மூலம் கிரிவலம் சென்றார்.