Yash Fitness Routine: : நம்ம கே.ஜி.எப். ஹீரோ யஷ்ஷோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..! சீக்ரெட்ஸ் எல்லாம் உள்ள இருக்கு..

கே.ஜி.எப். நாயகன் யஷ்ஷின் தினசரி உடற்பயிற்சி முறைகள் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது,

Continues below advertisement

கே.ஜி.எப். 2 படம் வர்ற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ்  ஆகப்போது. இந்த படத்துக்கு இந்தியா முழுக்க பேன்ஸ் மரண வெயிட்டிங்ல இருக்காங்க. கே.ஜி.எப். படத்துக்காகவே யஷ் சிறப்பு உணவு முறையும், ஒவ்வொரு நாளும் ஒரு உணவு முறையையும் கடைபிடித்து வருகிறார்.

Continues below advertisement

அவரது உடற்பயிற்சி முறையை விரிவாக கீழே காணலாம்.

திங்கள் கிழமை : (மார்பு பயிற்சிகள்)

  • பெஞ்ச் பிரஸ்,
  • தம்புள் பிரஸ்,
  • டெக்லின் பிரஸ்,
  • தம்புள் ப்ளை,
  • தம்புள் புல் ஓவர்

செவ்வாய்கிழமை : (தோள்பட்டை பயிற்சிகள்)

  • மிலிட்டரி ப்ரஸ்
  • முன்தோள்பட்டை ப்ரஸ் பயிற்சி
  • உட்கார்ந்த நிலையில் தம்புள்
  • தோளபட்டை ப்ரஸ்
  • பெண்ட் – ஓவர் லேட்டரல் ரெய்ஸ்
  • அப்ரைட் ரோ


புதன்கிழமை : (பின்பக்க பயிற்சி)

  • டீ பார் ரோ
  • உட்கார்ந்த நிலை கேபிள் ரோ
  • லாட் புள்டவுன் தி பிரண்ட்
  • பிரண்டட் சின் அப்
  • ஒன் ஆர்ம் தம்புள் ரோ
  • டெட்லிப்ட்

வியாழக்கிழமை : (பைசெப்ஸ்)

  • பார்பெல் கர்ள்ஸ்
  • தம்புள் கர்ள்ஸ்
  • ப்ரீச்சர் கர்ள்ஸ்
  • கான்சன்ட்ரேஷன் கர்ள்ஸ்
  • ரிஸ்ட் கர்ள்
  • ரிவர்ஸ் கர்ள்


வெள்ளிக்கிழமை : (ட்ரைசெப்ஸ்)

  • ஷார்ட் கிரிப் ட்ரைசெப்ஸ்
  • ரோப் புல்டவுன்
  • கேபிள் பையில் ட்ரெசெப்ஸ் எக்ஸ்டென்சன்
  • தம்புள் கிக்பேக்ஸ்
  • டிப்ஸ் பிகைண்ட் த பேக்

சனிக்கிழமை : எல்.இ.ஜி. பயிற்சிகள்

  • ஸ்குவாட்
  • லெகிங்
  • லெக் ப்ரஸ்
  • லெக் கர்ள்
  • லெக் எக்ஸ்டன்ஷன்
  • உட்கார்ந்த நிலையில் பாதங்களை உயரே தூக்குவது

உணவுப்பழக்கங்கள்

யஷ் தினசரி இரண்டு வேளை கட்டாயமாக ஜிம்மிற்கு செல்வதை பழக்கமாக வைத்துள்ளார். தினசரி காலையில் 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு செல்கிறார். முதல் அரைமணி நேரம் வெறும் வயிற்றிலே புஷ்அப், புல் அப்ஸ் பயிற்சிகளை எடுக்கிறார். மாலையில் எடையை நிர்வகிக்கிற பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

மதியம்

உணவுமுறைகளிலும் உடற்பயிற்சிக்கு தோதான உணவுகளையே பின்பற்றுகிறார். காலையில் உடற்பயிற்சியை முடித்தபிறகு அதிக கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக்கொள்கிறார். ஒரு கப் நட்ஸ்களுடன் ஜாதிக்காய் பொடி தூவி எடுத்துக்கொள்கிறார். 5 துண்டுகள் பிரௌன் பிரட், 8 முட்டையின் வெள்ளைக்கரு, நிறைய காய்கறிகள் மற்றும் சிறிதளவு தர்பூசணி அல்லது பப்பாளி எடுத்துக்கொள்கிறார்.

இரவு

மதிய உணவுக்கு முன்பு 11 மணியளவில் புரோட்டீன் மில்க்‌ஷேக்ஸ் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்கிறார். நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களே சாப்பிடுகிறார். மதியம் அதிக புரதம் கொண்ட உணவு சாப்பிடுகிறார். குறிப்பாக மீன் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். மாலையில் சிற்றுண்டி எடுக்கிறார். இரவில் மிதமான உணவு சாப்பிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை தனக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola