ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக ராட்சசன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'ராட்ஷசன்' நிகழ்த்தியது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால், 'முண்டாசுப்பட்டி' புகழ் ராம்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'ராட்ஷசன்' படத்தின் தொடர்ச்சியைப் பற்றி சூசகமாகத் தெரிவித்திருந்தார். 'முண்டாசுபட்டி' மற்றும் 'ராட்ஷசன்' படங்களுக்குப் பிறகு அவர்களின் அடுத்த படம் 'முண்டாசுபட்டி 2' மற்றும் 'ராட்ஷசன் 2' படமா? என்று இளம் இயக்குநரிடம் நடிகர்கேள்வி எழுப்பியிருந்தார். 'ராட்ஷசன் 2' படத்திற்காக இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று தெரியவந்துள்ளது .
இந்நிலையில் , இயக்குநர் ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷுடன் தொடங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே , இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்தில் பிஸியாக இருப்பதால், ஜூன் மாதம் இந்த ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டிருந்த படம் சில மாதம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது . இன்னும் படத்திற்கான பெயர் அறிவிக்கப்படவில்லை . கற்பனை மற்றும் அதிரடி நிறைந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்தார் , தனுஷ் வந்து இணையும் வரை படத்திற்கான முன் தயாரிப்பு பணியை செய்து வருகிறார்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமாருடன் 'ராட்சசன் 2' படத்துடன் இணைவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்றும், விரைவில் இந்தப் படத்தின் வேலைகளில் ஈடுபடுவதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார் நடிகர் தனுஷின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 2022-ஆம் ஆண்டில் ராட்ஷசன் 2-க்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறியிருந்தார் .