லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து வியந்து போனதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.


லால் சலாம் 


3, வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம் . கிரிக்கெட் விளையாட்டு, அதில் நடக்கும் அரசியலை மையக்கதையாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது இந்தப் படம். விஷ்ணு விஷால், விக்ராந்த், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்து லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லால் சலாம் படம் கடந்த ஜனவர் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தலைவர்  நடிப்பு அட்டகாசம்


லால் சலாம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு முழு காரணம் நடிகர் ரஜினிகாந்த். பாட்ஷா படத்திற்குப் பின் ரஜினிகாந்தை இந்தப் படத்தில் மொய்தீன் பாயாக மும்பையில் பெரிய டானாக இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலே இதற்கு காரணம். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.


நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்து தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். மேலும் டப்பிங்கின் போது படத்தைப் பார்த்த அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து வியந்துபோனதாக தெரிவித்துள்ளார். இந்த படம்  நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.





 வேட்டையன்


த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரானா டகுபதி, துஷாரா விஜயன்  இந்தப் படத்தில்  நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கேரளா, திருநெல்வேலி, தூத்துக்குடி , பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியை விருந்தாக வேட்டையன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.