மார்க் ஆண்டனி படத்திற்காக ஏழு ஆண்டுகள் தனது கால்ஷீட்டிற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  காத்திருந்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


மார்க் ஆண்டனி


விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தை த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன் படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை ரிது வர்மா ஹீரோயினாகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் குமார், செல்வராகவன், அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 


இதையும் படிங்க: Gokulashtami 2023: கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா.. பூஜை செய்ய உகந்த நேரம் எது?..வாங்க பார்க்கலாம்..!


டைம் டிராவலை தொலைபேசி வழியாக நடக்கும் காட்சிகளாக கதை அமைக்கப்பட்டுள்ளது மார்க் ஆண்டனி. சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால் மார்க் ஆண்டனி படம் குறித்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.


ஏழு ஆண்டுகள் காத்திருந்த இயக்குநர்


“மார்க் ஆண்டனி படத்தில் நான் நடிப்பது தெரிந்து  நிறைய நபர்கள் என்னிடம் வந்து ஏன் நீங்கள் ஆதிக் படத்தில் நடிக்கிறீர்கள் நீங்கள் அவரது முந்தைய படங்களை பாத்திருக்கிறீர்களா? என்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்னது ஒரே பதில் தான் . நான் என்னுடைய கடந்த காலத்தையே திரும்பிப் பார்க்காதவன் அதே போல் ஆதிக்கின் முந்தைய படங்கள் எப்படியானதாக இருந்தாலும் எனக்கு அவரது கடந்த காலத்தைப் பற்றி கவலை இல்லை. அவரைஒரு புது மனிதராகதான்  நான் பார்க்கிறேன். இதற்கு முன்னதாக அவர் இயக்கிய படங்கள் இரண்டும் சினிமாவில் சர்வைவ் செய்வதற்காக எடுத்தவை.



மார்க் ஆண்டனி படத்திற்காக எனக்காக 7 ஆண்டுகள் ஆதிக் காத்திருந்தார். ஒரு நாள் திடீரென்று எனக்கு ஃபோன் செய்து நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் அதற்கு  நீங்கள் தான் காரனம் என்று என்று எழுதிவைத்து விட்டு சாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார்.  நான் அவருக்கு மீண்டும் அழைத்து அவரை சமாதானப்படுத்தினேன். மார்க் ஆண்டனி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது அதனால் நான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று விஷால் கூறினார்.




மேலும் படிக்க: 26 Years Nerukku Ner: விலகிய அஜித்.. விஜய்யுடன் கைகோர்த்த சூர்யா.. ‘நேருக்கு நேர்’ ரிலீசாகி 26 வருஷமாச்சு..!