தமிழ் சினிமாவில்' செல்லமே'  திரைப்படம் மூலம் அறிமுகமானவர் விஷால். அதன் பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆனாலும் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள்  எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது நண்பரும் நடிகருமான ஆர்யாவுடன் நடித்துள்ள எனிமி படத்தையே பெரிதும் நம்பியுள்ளாராம். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஷாலில் 31 வது படமான வீரமே வாகை சூடும் படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகளை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர். கிட்டத்தட்ட 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம் . படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதற்காக விஷால் சிறிது காலம் ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தார் என்பதும் நாம் அறிந்ததே!






வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்குகிறார்.விஷாலின் VFF (vishal film factory ) தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.  வீரமே வாகை சூடும் படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு ,வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டு , அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


படத்தில் யோகிபாபு மற்றும் விஷால் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் படக்குழுவினர். யோகி பாபு மற்றும் விஷால் நடிக்கும் சில காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனரா, இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்த விஷால் “வீரமே வாகை சூடும்“ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார். 






வீரமே வாகை சூடும் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் இருக்க விஷாலில் அடுத்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளது.  விஷால் 32 (Vishal 32) படத்தையும் வினோத் என்னும் அறிமுக இயக்குநரே இயக்க உள்ளார். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் . படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக சுனைனா நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.