’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

’’ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வெளியே வரக்கூடாது என்பதால் கதவை வெளிபுறம் பூட்டி உள்ளார்’’

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பட்டி காமம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி காட்டு ராஜா (75) இவரது மனைவி காசியம்மாள் (65)‌. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு காட்டு ராஜா தனது மனைவியுடன் அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்கு அருகில் சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. தீ வேகமாக பரவியதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

Continues below advertisement

உள்ளே சென்று பார்த்தபோது காட்டு ராஜாவும், காசியம்மாளும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து காட்டு ராஜாவின் மகன்கள் குடும்பத்தினரை விசாரணை நடத்திய போது, காட்டு ராஜா - காசியம்மாள் இவர்களது இரண்டாவது மகன் குமார் (48) உயிரிழந்த பெற்றோர் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். இவரது 16 வயது மகன் பெத்தநாயக்கன் பாளையம் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காவல் துறையினர் விசாரணையின்போது முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், காட்டுராஜாவின் இரண்டாவது மகனான குமார் குடிபோதையில் தினமும் அவரது மனைவி ஜெயலட்சுமி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இவரது 16 வயது மகன் தாயை அடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். இதை கேட்காத தந்தையின் செயல்பாட்டிற்கு அவர்களது பெற்றோரே காரணம் என்று நினைத்ததாலும் சிறுவனின் தந்தை குமாரை காட்டு ராஜா இழிவுபடுத்தி பேசியதாலும் ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே தப்பி ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்பக்கத்தில் பூட்டியுள்ளார். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவனை சேலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் நல மையத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola