நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் (Rathnam) படத்தின் 2ஆம் நாள் வசூல் நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் ஹரி. போலீஸ் படமாக இருந்தாலும் சரி, குடும்பக் கதையாக இருந்தாலும் தனது அசாத்தியமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவரின் இயக்கத்தில் நடப்பாண்டு “ரத்னம்” படம் வெளியாகியுள்ளார். ஹரி இயக்கிய தாமிரபரணி மற்றும் பூஜை படங்களுக்கு பிறகு இப்படத்தில் விஷால் 3வது முறையாக ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பல தடைகளைக் கடந்து திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்காக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்தனர்.
தொடர்ந்து படத்துக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இப்படியான நிலையில், “ரத்னம் படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படம் முதல் நாள் ரூ.2.3 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் 2ஆம் நாளில் வசூலானது குறைந்தது.
அதன்படி ரத்னம் படம் இரண்டாம் நாள் ரூ.2 கோடி வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூல் நிலவரம் குறைந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சனி, ஞாயிறு வசூலை பொறுத்து தான் அடுத்த வாரம் வசூல் இருக்கும் என்பதால் 3ஆம் நாளான இன்று வசூல் நிலவரம் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!