தொடர்ந்து நடந்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷனில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அங்கு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில், படக்குழுவினர் பேசும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.
அதுபோல், நடிகர் விக்ரம் அவரின் துணை நடிகர் ஐஸ்வர்யா ராயை பற்றி புகழ்ந்து பேசினார். அதில் “ ஐஸ்வர்யா ராய் பிரபலமாக உள்ளதனாலும் பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதாலும் அவரின் மீது அனைவருக்கும் ஒரு கண் உள்ளது. உலகில் பல பெண்கள் இருந்தும், அதுவும் ராணியாக இருந்தும், ஐஸ்வர்யா குறையில்லாத அழகியாக காட்சி அளிக்கிறார். அவரை பலர் உற்று நோக்குவதால், அவர் எப்போதும், குறையின்றி கச்சிதமாக காட்சி அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாவாக வாழ்வது மிக கடினமான ஒன்று.” என்று கூறினார்
முதல் முறையாக ஜஸ்வர்யாவை சந்தித்த போது என்ன நடந்தது என்று, சற்று விக்ரம் யோசித்து சில விஷயங்களை பகிர்ந்தார். “முதல் முறை அவரை, நான் ஒரு கூட்டத்தில் கண்டேன். அவர் வருகை தரும்போது, அவரின் ஆடை அவரின் காலில் சிக்கியது. அவர் தடுக்கி கீழே விழுந்துவிடுவார் என்று எண்ணினேன். அவரின் நம்பிக்கை, பொலிவு, நயம் அனைத்தையும் வியக்கிறேன். எங்கு சென்றாலும், சென்னைக்கோ அல்லது தென்னிந்திய பகுதிகளுக்கோ எங்கு சென்றாலும் , ஜவுளி கடை விளம்பர புகைப்படங்களில் இவரை காணலாம்.” என்று பேசினார்
அதுபோக, ஐஸ்வர்யாவுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். “ அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். அதுவும் இப்படம் மூன்றாவது படம். ஒரு கதாப்பத்திரமாகவே அவர் மாறிவிட்வார்.அது கடினமான ஒன்று. இப்போது அவர், ஒர் குழந்தையின் தாய், குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். அபிஷேக்குடன் நேரத்தை செலவிட வேண்டும். இப்படி பட்ட சூழ்நிலையிலும் அவரை பல ரசிகர்கள் உற்று நோக்குவர். நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. ” என விக்ரம் மனம் திறந்து பேசினார்.
மேலும் படிக்க : பத்து கோடி பார்வையாளர்களைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் பட பாடல்...உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா?