பத்து கோடி பார்வையாளர்களைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் பட பாடல்...உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா?

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார் “டார்லிங்” படத்தின் மூலம் நடிகராகவும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார்.

Continues below advertisement

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் பட பாடல் ஒன்று 10 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. 

Continues below advertisement

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார் “டார்லிங்” படத்தின் மூலம் நடிகராகவும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார். ஆரம்பத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட சில சர்ச்சையான கதையில் நடித்த அவர் தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில்  அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கிய ‘பேச்சுலர்’ படத்தில் நடித்திருந்தார். 

இப்படத்தில் திவ்ய பாரதி நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதேபோல் நக்கலைட்ஸ் தனம்,  அருண், பகவதி பெருமாள்,விஜய் முருகன், இயக்குநர் மிஷ்கின் என பல கேரக்டர்கள் இடம் பெற்றிருந்தனர். பேச்சுலர் படத்தில் இன்றைய தலைமுறையினர் காதலையும், காமத்தை அவர்கள் அணுகும் விதத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் திரைக்கதையில் காட்டியிருந்ததால் இப்படம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

குறிப்பாக “அடியே நீ தானடி” பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், சித்துகுமார், திபு நின்னன் தாமஸ் ஆகிய 3 பேர் இசையமைப்பாளர்களாக பணியாற்றினர். இதில் அடியே நீ தானடி பாடல் ஜிகேபி எழுத, திபு நின்னன் தாமஸ்  இசையமைத்திருந்தார். பாடலின் வரிகளும், கபில் கபிலனின் குரலும் இப்பாடலை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் அடியே நீ தானடி பாடல் 10 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ரசிகர்கள் #Adiye100MillionViews, #Adiye ஆகிய ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola