கலைஞர் புகைப்பட கண்காட்சி


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டம் கடந்த ஆணு ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நிறைவை எட்டியுள்ளது. கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் கடைசிக் கட்டமாக சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்   அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. புகைப்பட நிபுனர் சுப்பு இந்த கண்காட்சியை முழுவதும் வடிவமைத்துள்ளார்.


இந்த கண்காட்சியை   இன்று நடிகர்கள் நாசர், சத்யராஜ், விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்வில் பேசிய நடிகர் விஜயகுமார் கலைஞர் கருணாநிதிக்கும் தனக்குமான உறவைப் பற்றியும் கலைஞரின் அரசியல் சாதனைகளையும் பாராட்டி பேசினார்


கலைஞர் பற்றி விஜயகுமார்


" 1965 ஆம் ஆண்டில் இருந்து எனக்கு கலைஞர் கருணாநிதியுடனான நட்பு தொடங்கியது. கடந்த 50 ஆண்டுகாலமாக நான் அவருடைய குடும்பத்தில் ஒரு உறுபினரைப் போல் நெருக்கமாக இருந்து வருகிறேன். இன்று தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உலகத்தில் இருக்கும் தமிழர்கள் எல்லாரும் கலைஞரின் உடன்பிறப்புகள் தான். கலைஞர் தனது அரசியல் வாழ்க்கையை எங்கிருந்து தொடங்கினார். அவர் தமிழக மக்களுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை புகைப்படங்கள் வழியாக மிகச்சிறப்பாக இந்த கண்காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். உலகம் உள்ளவரை கலைஞரின் புகழ் வாழும் என்று இந்த மேடையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று விஜயகுமார் பேசினார்.


உதயநிதி ஸ்டாலின் பற்றி விஜயகுமார்


தொடர்ந்து பேசிய அவர் " அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்கிறார் பிள்ளை என்று சொல்வார்கள். அதேபோல் தான் இன்று முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் அவர்கள் தனது தந்தை தமிழக மக்களுக்கு செய்ததை விட இருமடங்கு செய்துகொண்டிருக்கிறார். உழவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கலைஞர் சொன்னதுபோல முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு , பெண்களுக்கு மாதாமாதம் வங்கி கணக்கில் பணம், இலவச பேருந்து என சொல்லாததை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார். அதனால் தான் 40/40 தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றுள்ளார். அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தொகுதிகளிலும் எல்லா தொகுதிகளிலும் அவரே வேற்றிபெறுவார் என்று நினைக்கிறேன். எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். ஆனால் இந்த கட்சியே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது வேறு ஒரு கட்சி தேவையில்லையே. அதே போல் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வருகால தமிழகத்திற்கு சிறப்பாக செயலாற்றுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார் விஜயகுமார்.