தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 


2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில 2 மாதங்களே இருப்பதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க போவது நிச்சயம். அந்த வகையில் தீபாவளிக்கு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புது போஸ்டர் வெளியாகியிருந்தது.




இதனைத் தொடர்ந்து நவம்பர் 3 அன்று வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் நடிகர் விஜய் தான் இப்பாடலை பாடியுள்ளார். ரஞ்சிதமே பாடல் நேற்றைய முன்தினம் (நவம்பர் 5) வெளியானது. இதன் வரிகள் மட்டுமல்லாமல் பாடலின் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 




ஒரு புறம் விஜய்யின் ரஞ்சிதமே பாடலை ரசிகர்கள் வைப் செய்து வரும் நிலையில், இன்னொரு புறம் பாடலின் வீடியோவை பழைய பாடல்களுடன் இணைத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய்யின் பழைய பாடல்களின் வீடியோவுக்கு, ரஞ்சிதமே பாடலின் ஆடியோவையும் சிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 






 






 



தற்போது வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்களான 'ரஞ்சிதமே' பாடல் பல்வேறு ரீதியாக வைரலாகி வருகிறது.