Varisu update : யாருக்கு என்ன ஆச்சு விஜய் சார்? ஏன் இவ்ளோ டென்ஷன்? லேட்டஸ்ட் லீக் அவுட் வீடியோ... 

Continues below advertisement

வாரிசு படத்தின் ஷூட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படங்களும், அவ்வப்போது வீடியோக்களும் லீக்காகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இவ்வளவு பெரிய திரை பட்டாளமா:

Continues below advertisement

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சியின் இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்களுடன் ஷியாம், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, சம்யுக்தா, சரத்குமார், குஷ்பூ, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு பெரிய திரைப்பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. "வாரிசு" படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் தமன். இசையமைப்பாளர் தமன் - இளைய தளபதி விஜய் ஜோடியில் உருவாகும் முதல் திரைப்படம் "வாரிசு".  

லேட்டஸ்ட் அப்டேட் :

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக வைசாக்கில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களிடம் வைரலாகி வந்தன. விஜய் விமான நிலையத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் செல்லும் புகைப்படங்கள், துறைமுகம் காட்சிகள், சண்டை காட்சிகள் என அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட் வந்த வண்ணமாகவே உள்ளது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் விஜய், ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களை இது குதூகலமாக கொண்டாட வைத்துள்ளது. 

நடிகர் விஜய் டென்ஷன் காரணம்:

அந்த வகையில் தற்போது மருத்துவனையில் விஜய் மற்றும் பிரபு இருவரும் ஒருவரை வேகவேகமாக மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் பதறியபடி அழைத்து செல்வது போன்ற ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் விஜய் மற்றும் பிரபு இருவரும் மிகவும் டென்ஷானாக இருப்பது தெரிகிறது. அது காட்டு தீ போல விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. மேலும் பல அப்டேட்ற்காக வெயிட் செய்து கொண்டு இருக்கிறார்கள். 

 

பொங்கல் வெளியீடு :

ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள "வாரிசு" திரைப்படம் ஜனவரி 2023ல் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர்காக ரசிகர்கள் காத்து  கொண்டு இருப்பதால் அது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. "வாரிசு" பாடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.