Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? மாலை 5 மணிக்கு அப்டேட்

விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

Continues below advertisement

தளபதி 69

தி கோட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். எச் வினோத் இப்படத்தை இயக்கவிருப்பதாக இதுவரை வெளியான தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. இப்படம் விஜயின் கடைசி படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் படம் பற்றிய அப்டேட்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதற்கேற்ற வகையில் தளபதி 69 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Continues below advertisement

தி கோட் படத்திற்கு நடிகர் விஜய் ரூ 200 கோடி சம்பளமாக பெற்றார். தற்போது  தளபதி 69 படத்திற்கு விஜய்  ரூ275 கோடி வரை சம்பளமாக பெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜயின் சமபளமே 275 கோடி என்றால் படத்தின் பட்ஜெட் 400 முதல் 450 கோடியாக இருக்கமால் என்று சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள். விஜயின் கடைசி படம் என்பதால் நிச்சயம் இப்படத்திற்கு மிகப்பெரிய மார்கெட் இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம் இப்படம் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஒரு ஒரு அடித்தளமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். 

எச் வினோத் விஜய் கூட்டணி 

சதுரங்க வேட்டை , தீரன் , துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் எச் வினோத். சமூக அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசும் எச் வினோத் அவற்றை சரியான கமர்ஷியல் திரைப்படங்களுக்கு ஏற்ற வகையிலும் கையாள்கிறார். ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் தன்னுடைய அரசியலை திரைக்கதையில் இணைக்கவே ஒவ்வொரு படங்களிலும் முயற்சிக்கிறார். விஜயை வைத்து அவர் இயக்கப்போகும் அடுத்த படமும் இதே மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கே.வி. என் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் படத்தின் அறிவிப்பு வெளியான சில காலத்திற்குள்ளாகவே படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது

Continues below advertisement