இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:


அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வரலாம என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால் ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வம் நிலவுகிறது.





முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் தான் இன்று (செப்டம்பர் 12) வங்கதேச அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த அணியின் ஷோரிஃபுல் இஸ்லாமின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வங்கதேச டெஸ்ட் அணி:


நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் , ஷத்மான் இஸ்லாம் , மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் , நயீம் ஹசன், நஹித் ரனா, ஹசன் மஹ்முத் ரனா தஸ்கின் அகமது , சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்


இந்திய டெஸ்ட் அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.