இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜய்யின் 68வது படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. 


லியோ கொண்டாட்டம்


லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தை LEO MONTHஆக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


இந்தப் படத்திலும் நட்சத்திர பட்டாளம் உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதோடு, கில்லி படத்திற்கு பிறகு விஜய் - திரிஷா லியோ படத்தில் இணைந்திருபது ரசிகர்கள் கொண்டாடுவதற்கான முக்கிய காரணமாகவும் இருக்கிறது. லியோ ஃபீவர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தளபதி 68 படத்தின் தகவல்கள் ரசிகர்களின் கொண்டாடத்தை அதிகப்படுத்தியுள்ளது.


கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தளபதி 68 


வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் விஜய் 68 படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை நேற்று எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. விஜயதசமி அன்று பூஜை புகைப்படங்களை வெளியிடலாம் என்று படக்குழு திட்டம்மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், முன்னதாகவே, நடிகர் பிரசாந்த பூஜையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அதை உறுதி செய்துள்ளார். 


இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் முதன் முறையாக இணைகிறார். ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரோடு நடிகர் மைக் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான நிலையில் தளபதி 68 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரபுதேவா, லைலா, மீனாட்சி சௌத்ரி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் படப்பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில், பிரியங்கா மோகன், ஜெய், வைபவ், சினேகா, உள்ளிட்டோரும் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. தளபதி 68 படத்தில் அதிநவீன தொழில்நுட்பமான ஏ.ஐ. மூலம் விஜய் இளமையாக தோன்றும் பாடல்காட்சி படமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே லியோ படம் வெளியாவதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் தளபதி 68 பட அப்டேட்டையும் எதிர்பார்த்திருக்கின்றனர்.