நடிகர் விஜய் சினிமா கரியரை முடித்து அடுத்தபடியாக அரசியலில் களமிறங்க இருக்கிறார். விஜய் சினிமாவில் இருந்து வெளியேறு அதே நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் தனது என்ட்ரியை அறிவித்துள்ளார். நடிகரின் மகன் நடிகனாக தான் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் ஜேசன் சஞ்சய்க்கு நடிப்பதற்காக பல வாய்ப்புகளும் வந்தன. ஆனால் சிறு வயதில் இருந்தே இயக்குநராக வேண்டும் என்பதே ஜேசனின் கனவாக இருந்துள்ளது. இதற்காக கனடாவில்  உள்ள புகழ்பெற்ற ரயர்ஸன் பல்கலைகழகத்தில் திரைப்பட உருவாக்கம் பற்றி கோர்ஸ் படித்து முடித்துள்ளார் அவர்.


ஜேசன் சஞ்சய்


நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்கவிருப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதற்காக ஓராண்டுகளுக்கு முன்பே லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சயுடன் ஒப்பந்தமும் போட்டது. இந்த படத்தில் நாயகனாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.  தற்பொது லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் முதல் படத்தைப் பற்றி அப்டேட் வெளியிட்டுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் முன்னதாக மாநகரம் , கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.