சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை தீவிர எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு தேவை எனவும் தமிழ்நாடு வெதன்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புயல் உருவாகிறதா?


''வரும் ஆனால் வராது'' என்ற கதையாக புயல் உருவாகும், ஆகாது என்று நிலை மாறிக் கொண்டே இருந்த நிலையில், இறுதியாக ஃபெங்கல் புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேடிசிசி பெல்ட்டுக்கு மிக மிக கனமழை 


இந்த நிலையில், இந்த புயல் கேடிசிசி ( KTCC ) பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கும் மிக மிக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’நாளை (சனிக்கிழமை) அதீத எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு தேவை. ஞாயிற்றுக்கிழமையும் மழை நீள வாய்ப்பு உள்ளது.


விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்


புயல் அமைப்பு முறை பாண்டிச்சேரி முதல் சென்னை வரையிலான பிராந்தியங்களில் பலத்த மழையைக் கொடுக்கும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.






நேற்று இரவு சிறிய மேகம் 50 – 60 மி.மீ. வரை மழையைக் கொடுத்தது. இந்த புயல் உண்மையிலேயே கணிக்க மிகவும் கடினமாக உள்ளது’’ என்று தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!