தமிழ் சினிமாவில் எந்தவொரு பரிந்துரைகளும் இல்லாமல், தனி ஒருவனாக களம் கண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. வசீகரிக்கும் கண்கள் , பளீச் சிரிப்பு , நம்மில் ஒருவர் போன்ற தோற்றம் கொண்ட விஜய் சேதுபதி அலப்பறை இல்லாத மாஸ் நடிகர். தொடர் முயற்சியும் , அந்த துறையின் மீது ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் போதும் , தன் நிலை என்றோ ஒரு நாள் உயரும் என்பதற்கு முன் உதாரணம் விஜய் சேதுபதி. ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நடிகர் விஜய் சேதுபதிக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 


 






இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கமல்ஹாசனை டேக் செய்து மிக்க நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, விக்ரம் வேதா திரைப்படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் . அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்தார். தற்போது கமல்ஹாசனுக்கும் வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண