இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்ட போது பிசிசிஐ மூலமாக அவரது ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விராட் கோலி நேற்று திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறி உள்ளார்.




இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "2014 ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எம்.எஸ் முடிவு எடுத்ததால், நீங்கள் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.


அந்த நாளில் எம்.எஸ் தோனியும், நீங்களும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் அரட்டை அடித்து கொண்டீர்கள். அப்பொழுது உங்களை பார்த்து தோனி, உனக்கு இனி சீக்கிரமாகவே தாடி நரைக்க தொடங்கும் என்று கேலி செய்தார். அப்பொழுது, நான் உள்பட அனைவரும் சிரித்தோம். அன்று முதல், உங்கள் தாடி மட்டும் நரைத்திருப்பதை நான் அன்றாட பார்த்து வருகிறேன். 






அன்று முதல் இன்று வரை உங்களுடைய வளர்ச்சி அபார வளர்ச்சி. ஆம், இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் வளர்ச்சி மற்றும் உங்கள் தலைமையின் கீழ் அந்த அணி என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


2014 ம் ஆண்டு நீங்கள் கேப்டனாக பதவியேற்று கொண்டபோது, மிகவும் இளமையாகவும் அப்பாவியாகவும் இருந்தீர்கள். உங்களிடம் இருந்த நல்ல எண்ணங்கள்,நல்ல நோக்கங்கள் மட்டுமே உங்களை வாழ்க்கையில் உயர்த்தியது. சவால்கள் உங்களை அடுத்தடுத்து முன்னேற்றியது. 


நீங்கள் எதை செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். நீங்கள் பேராசையுடன் இதுவரை எதையும் செய்யவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். கேப்டன் பதவியிலிருந்து விலகியது கூட எதற்கு என்று தெரியும். ஒரு பொறுப்பு நம்மை இறுக்கி பிடித்துகொள்ளும் போதுதான் நம்மை கட்டுப்படுத்தி கொள்கிறோம். இனி நீங்கள் எல்லையற்றவர். 


இந்த 7 வருடங்களின் உங்கள் கற்றலை உங்கள் மகள் காண்பாள்.. நீங்கள் நன்றாக விஷயங்களை கையாண்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண