தமிழ் சினிமா என்றாலே ரஜினி-கமல் என இரண்டு துருவங்கள்தான் என நினைத்திருந்தவர்களுக்கு தான் 'துருவ நட்சத்திரம்' என நினைவூட்டியவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி என்றால் லாஜிக்கை மீறிய ஸ்டைல் வகையறா கமர்ஷியல் சினிமாக்கள், கமல் என்றால் திகட்டத் திகட்ட காதல் ரொமான்ஸ் என இருந்த தமிழ் சினிமாவில் மண்வாசம், அதிரடி ஆக்‌ஷன், சிவந்த கண்களுடன் பொறிபறக்க வசனங்கள் என விஜயகாந்தை ’சி’ செண்டர்களுக்கான சூப்பர் ஸ்டாராக்கியது. காங்கிரஸின் மதுரை மாவட்ட நிர்வாகியான அழகரின் மகனான விஜயராஜ்தான் பின்னாளில் விஜயகாந்த் ஆனார். 


இவரது பெயரை மாற்றியவர் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா. 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தூரத்து இடி முழக்கமும், சட்டம் ஒரு இருட்டறையும் அவரை ஹீரோவாக்கியது.


சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தார். தற்போது உடல்நிலை பிரச்சினை காரணமாக அரசியலில் இருந்தும், சினிமாவில் இருந்தும் தள்ளியே இருக்கிறார். காலம்  இவருக்கு ஓய்வளித்தாலும், இவரது இரண்டு வேடத்தில் நடித்த படங்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காதவையாக உள்ளது. 


அப்படி ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்த இரு வேடங்கள் படங்களின் பட்டியலை இங்கே காணலாம்..


ராமன் ஸ்ரீராமன் :


முதல் முறையாக நடிகர் விஜயகாந்த் இரு வேடங்களில் மிரட்டிய படம்தான் ’ராமன் ஸ்ரீராமன்’. இந்த படத்தை டி.கே. பிரசாத் எழுதி, இயக்க, பாபு கே தயாரித்தார். மேலும் இப்படத்திற்கு சிவாஜிராஜா இசையமைத்திருந்தார். 


உழவன் மகன் : 


கடந்த 1987 ம் ஆண்டு விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த திரைப்படம் உழவன் மகன். இப்படத்தை அரவிந்தராஜ் இயக்க, விஜயகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்திருந்தார். திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன், இசையமைப்பாளர் மனோஜ் ஞான், ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இத்திரைப்படம் 21 அக்டோபர் 1987 அன்று வெளியிடப்பட்டது.


காலையும் நீயே மாலையும் நீயே : 


விஜயகாந்த் நடிப்பில் 1988 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காலையும் நீயே மாலையும் நீயே. இந்த படத்தை  ஆர். சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். 


நல்லவன் : 


கடந்த 1988 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்லவன். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரும் நடித்தனர்.



  • பொறுத்தது போதும் 

  • தர்மம் வெல்லும் 

  • சிறையில் பூத்த சின்ன மலர்

  • ராஜதுரை

  • காந்தி பிறந்த மண்

  • வீரம் வெளஞ்ச மண்ணு

  • கள்ளழகர்

  • கண்ணுபடபோகுதய்யா 

  • வானத்தைப்போல

  • தவசி

  • பேரரசு

  • மரியாதை 


என மொத்தம் நடிகர் விஜயகாந்த் 16 இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.