தீவிர ரசிகர் உருவாக்கிய தளபதி விஜய்யின் 10 வருட சவால் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
விஜய் தற்போது 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. நேற்றுமுன்தினம் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவை விஜய் மற்றும் இயக்குநர் வம்சி பைடிபள்ளி சந்தித்தார். நேற்று இரவு ஹைதராபாத்தில் நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவியது.
முதலமைச்சருடனான சந்திப்பின் போது விஜய் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்டில் காணப்பட்டார். தற்போது விஜய்யின் 10 ஆண்டுக்கு முன்பாக எடுத்த படத்தையும், லேட்டஸ்ட் படத்தையும் வைத்து ஒரு அழகான படத்தொகுப்பை ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். ரசிகர்களால் உருவாக்கப்பட்ட '10 வருட சவால்' படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டில், தளபதி விஜய் ஹைதராபாத்தில் நடந்த தனது பத்தாண்டுகள் பழமையான படமான 'துப்பாக்கி' ஆடியோ வெளியீட்டிற்காக இதேபோன்ற வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார். கடந்த புதன்கிழமை, நடிகர் அதே பாணியில் ஆடை அணிந்திருந்தார். இதை கவனித்த ரசிகர்கள் ஃபேன்மேட் எடிட் செய்துள்ளனர். நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயா பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்