நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படம் குறித்தான ட்ரோல்களும், மீம்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
அதனை தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலிப் குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர்169 படத்தை எடுக்க இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், இப்படம் 2023-ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு பண்டிகையின்போது வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இயக்குநர் நெல்சன் திலிப் குமார் தனது கும்பத்துடன் துபாய் சென்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நெல்சனின் மனைவி மோனிசா நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ் "தி கேங் ஆப் துபாய் டைரிஸ், காமெடி கேங் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் நெல்சன் திலிப் குமாரின் குடும்பத்தினரை சேர்த்து அதில் ஒரு சில நடிகை, நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். அதில், பிக்பாஸ் கவின், சுனில் ரெட்டி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்