தனது மனைவியை மொபைல் போன் மூலம் விவாகரத்து செய்ததற்காக இஷ்தியாக் ஆலம் என்ற நபர் மீது சத்தீஸ்கர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியுடன் உரையாடியபோது தொலைபேசியில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


ஜார்கண்ட் மாநிலம் பலுமத் பகுதியைச் சேர்ந்த இஷ்தியாக் ஆலம் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு பெண் ஒருவரை மணந்தார். குழந்தை பிறக்காததால் அந்த பெண்மணியை அவரது கணவர் மற்றும் மாமனார் சித்தரவதை செய்தனர். இதனால், அப்பெண் கடந்த வருடம் சத்தீஸ்கரில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றார். கணவர் வீட்டில் தான் எதிர்கொண்ட சித்தரவதைகளைப் பற்றி தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.


இந்த விஷயத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் சகோதரரும் பெண்ணை அமைதியாக இருக்கவும், கணவனிடம் பேசவும் கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கணவர்  2021 அக்டோபர் 19 அன்று, அந்தப் பெண்ணை தொலைபேசியில் விவாகரத்து செய்தார்.  “நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், தலாக், தலாக், தலாக்” என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். சம்பவத்தை உறுதி செய்வதற்காக தனது சகோதரருடன் பாலுமத் நகருக்குச் சென்றபோது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணை ஆலம் தொடர்ந்து துன்புறுத்தி சித்தரவதை செய்தார். அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆலம் ஏற்கனவே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அந்த பெண்ணும் அவரது சகோதரரும் கண்டுபிடித்தனர். இருவரும் ஏமாற்றத்துடன் சத்தீஸ்கர் திரும்பினர்.


பாதிக்கப்பட்டவர் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆலத்திற்கு எதிராக சட்டப்பூர்வமாக போராட முடிவு செய்து, மே 17 அன்று போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், “பாதிக்கப்பட்ட பெண் சிறிது நேரம் தனது தாய் வீட்டிற்கு வந்தார், அவரை திரும்ப அழைத்துச் செல்ல கணவனை அழைத்தபோது, அவர் தனது மனைவியை தொலைபேசியில் விவாகரத்து செய்தார். நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று உயரதிகாரி உறுதியாக கூறினார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண