தி கொட்
நடிகர் விஜயின் 68 ஆவது படமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் படம் உருவாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , மீனாக்ஷி செளதரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கோட் படத்தின் இறுதிகட்ட வி.எஃப்.எக்ஸ் பணிகள் முடிந்து வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது வரை இப்படத்தின் முன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் வெளியாகிய ஸ்பார்க் பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
படம் பார்த்து விஜய் கொடுத்த ரெஸ்பான்ஸ்
விஜயை வைத்து படம் இயக்குவது இயக்குநர் வெங்கட் பிரபுவின் நிறைய நாள் கனவாக இருந்து தற்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் விஜய் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜயின் இள வயது தோற்றம் டீ.ஏஜிங் தொழில்நுட்பத்தின் வழியாக உருவாக்கப் பட்டுள்ளது. டைம் டிராவலை மையப் படுத்திய ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் தி கோட் படத்தை நடிகர் விஜய் பார்த்து இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி கோட் படத்தைப் பார்த்த விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவை கட்டிப்பிடித்து “கலக்கிட்ட…அவசரப்பட்டு ரிடையர்மெண்ட் அறிவிச்சுட்டேன்…இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம்” என்று தெரிவித்ததாக சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தளபதி 69
தி கோட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எச் வினோத் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Thalapathy 69 : விஜயுடன் இணையும் 'குட்டி குடியே...' நடிகை! கசிந்த 'தளபதி 69' அப்டேட்...