Thalapathy 69 : விஜயுடன் இணையும் 'குட்டி குடியே...' நடிகை! கசிந்த 'தளபதி 69' அப்டேட்...

Thalapathy 69 : ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் இணைய இருக்கும் 'தளபதி 69' படம் குறித்த அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக விளங்கும் நடிகர் விஜய் அரசியலில் களம் காண இறங்க போவது ஒரு பக்கம் மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் அவரை இனி மாஸான ஹீரோவாக திரையில் காண முடியாதே என்ற வருத்தமும் உள்ளது. நடிகர் விஜய்யின் அரசியலில் பிரவேசத்திற்கு முன்னர் இறுதியாக அவர் நடிக்க இருக்கும் தளபதி 69 படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் ஒரே மாத கால அவகாசம் தான் உள்ளது என்பதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் மும்மரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

'தி கோட்' படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் 'தளபதி 69' படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இவர்களின் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் அதுவே ரசிகர்களுக்கு ஒரு ஸ்பார்க்காக இருந்தது. இது ஒரு அரசியல் சார்ந்த அதிரடி திரில்லர் படமாக உருவாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'பிரேமலு' புகழ் இளம் நடிகையான மமிதா பைஜுவை அணுகியுள்ளனர் என்றும் அவர் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

ஜூன் மாதத்திலேயே 'தளபதி 69' படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இதுவரையில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதன் காரணமாக தற்போது 'தளபதி 69 ' படம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. தயாரிப்பாளர்கள் குழு அப்படம் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது 'தளபதி 69' படத்திக்கான டெஸ்டிங் லுக் சென்னையில் நடைபெற்றுள்ளது. டெஸ்டிங் லுக் நிறைவடைந்ததும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 முதல் 'தளபதி 69' துவங்க வாய்ப்புகள் உள்ளன. 

 

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் நடிகர் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் என்றும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களின் உண்மை நிலவரம் என்ன என்பது படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானால் மட்டுமே அறியப்படும். 

  

Continues below advertisement
Sponsored Links by Taboola