நடிகர் விஜய் என்ற பெயர் எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை அள்ளினாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. 


இப்படியான சூழ்நிலையில் வாரிசு படத்தின்போது நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ க்ளிப்பை பாடலாசிரியர் விவேக், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாடலாசிரியர் விவேக் ஒரு பந்தை சிக்ஸருக்கு அனுப்ப, அது வெறும் பவுண்டரி என்று எதிரணி வாதிட்டனர். அப்போது, விவேக்கிற்கு பின்னால் நின்ற நடிகர் விஜய் “ஏன்ப்பா! அது சிக்ஸர்தான். நீங்க அடிச்சா மட்டும் சிக்ஸர், நாங்க அடிச்சா ஃபோர் தானா?” என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு எதிரணி வீசிய அடுத்த பந்தை விட்ட விவேக், அதற்கு அடுத்த பந்தை சிக்ஸர் அடித்து, விஜய் விளையாடிய அணியை ஜெயிக்க வைத்தார். நாண் ஸ்ரைக்கில் ரஷ்மிகா மந்தனா நிற்க, எதிரணி பீல்டராக யோகி பாபு நின்றிருந்தார். 






விஜய் கிரிக்கெட் விளையாடுவது இது முதல்முறையல்ல..!


நடிகர் விஜய் ‘பைரவா’ படத்தின்போது கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த படப்பிடிப்பு தளத்தின் படப்பிடிப்பு முடிந்து கேரவன் செல்லாமல் அனைவருடன் இணைந்து விளையாடியதாக கூறப்படுகிறது. அதேபோல், நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்த முதல் திரைப்படம் ‘மாஸ்டர்’. அந்த படத்தில் நடித்திருந்த சாந்தானு, விஜய் டிவி புகழ் தீனா ஆகியோர் கூட மாஸ்டர் படத்தில் நாங்கள் ஒன்றாக நடித்தபோது நடிகர் விஜய் எங்களுடன் கிரிக்கெட் விளையாடினார் என்று தெரிவித்தனர். இதுபோல் பல நடிகர்கள், பல பேட்டிகளி விஜய் எங்களுடன் கிரிக்கெட் விளையாடினார் என்று சொல்லி இருந்தாலும், அதற்கான வீடியோக்களை இதுவரை நாம் யாரும் பார்த்தது கிடையாது. 


இப்படி இருக்க, நடிகர் விஜய் முதல்முறையாக படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. 


தளபதி 68:






லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் G.O.AT (தளபதி 68) படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, மீனாக்‌ஷி செளதரி, சினேகா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.  புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை அசர வைத்தது.