உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திருவிழாவான ‘லியோ’ பட  திரைப்பட ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் லியோ பட போஸ்டர்கள் அந்த நகர பேருந்துகளில் ஒட்டப்ப்பட்டுள்ளது.


லண்டன் பேருந்துகளில் லியோ போஸ்டர்கள்


நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வெளியீட்டு உரிமையாளரான அஹிம்சா எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, லியோ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக லண்டன் நகரில் பேருந்துகளில் லியோ பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.


இது தொடர்பான அறிவிப்பினை ஏற்கனவே அஹிம்சா நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், லண்டல் பேருந்தில் லியோ போஸ்டர் இருப்பதை ரசிகர்கள் ஃபோட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




லியோ 


லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கெளவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் LCU -வில் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22ல் லியோ படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்தப் பாடல் அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத் அசல் கோலார் பாடியுள்ளனர்.  விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.



 


மற்றொரு பாடலான 'Badass' சமீபத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், புதிய பட போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு லியோ படத்தில் இன்னும் மூன்று மான்டேஜ் ரக பாடல் கதை சொல்வது போல இருக்கும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



லியோ ட்ரெய்லர்


லியோ ட்ரெய்லர் வெளியாகி கடும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விஜய் ஆபாச வார்த்தை பேசும் காட்சிக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் லியோ பட ரிலீஸ்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.