நடிகர் விஜய்யின் ஃபிட்னெஸ், உணவு, ஆடைத்தேர்வு ஆகியவை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை அவரது தாய் ஷோபா பகிர்ந்துள்ளார்.


விஜய்யின் அம்மா:


தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் விஜய்க்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,  நடிகர் விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவுக்கும் இருக்கும் பிணைப்பு அனைவருக்கும் தெரியும்.  அம்மாவின் செல்ல மகனாக இன்று வரை வலம் வரும் விஜய், முன்னதாக தன் தாய் ஷோபாவுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வைரலானது.


இந்நிலையில் அனையர் தின சிறப்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்துள்ள ஷோபா விஜய் பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


““விஜய் என்னுடன் ஒரே ஒரு ஃபோட்டோ, இன்ஸ்டாகிராமில் போட முடியாது, டிபியில் வைத்துக் கொள்கிறேன்” எனக் கேட்டேன். ‘சரி அழுவாதீங்க’ என சொல்லி விஜய் என் அருகில் அமர்ந்தார்.  ‘மேல உக்காருப்பா’ என்றேன். இல்ல பரவால்ல... எனக்கூறி கீழே உட்கார்ந்தார். அப்படி நாங்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ அப்படியே வைரலாகி விட்டது” என வைரல் புகைபடத்தின் பின்னணி கதை குறித்து ஷோபா பேசியுள்ளார்.


பிட்னஸ் ரகசியம்:


தொடர்ந்து விஜய் முன்பை விட ஸ்மார்ட் ஆகிவிட்டாரே, உடம்பை இப்படி மெருகேற்றியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஷோபா, “எப்பவும் போல தோசை தான் சாப்பிடுகிறார். காலை இரண்டு தோசை, நைட் இரண்டு தோசை, அப்புறம் ஒர்கவுட் செய்வார்.


டயட்ல சரியாக இருப்பார் அவ்வளவுதான். விஜய்க்கு நான் என்றுமே ஃபார்மல் ஷர்ட் தான் தேர்வு செய்வேன். குறிப்பாக அருக்கு ஒரு கலர் பிடிக்கும் என்றில்லை. நீலம், கறுப்பு, ஆர்மி பச்சை ஆகிய நிறங்களை அதிகம் அணிவார்” எனப் பேசினார்.


எல்லா நாளும் ஒன்றே:


தொடர்ந்து அன்னையர் தினத்து விஜய் பரிசு கொடுப்பாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஷோபா, “விஜய்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்; கர்த்தர் உருவாக்கிய நாள்களில் எல்லா நாளும் ஒன்று தான் என சொல்வார்கள்.


விஜய்க்கும் சரி, எஸ்ஏசிக்கும் சரி தனியாக ஒரு நாளை இப்படி கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் நான் ஆசையாகக் கொண்டு சென்று இன்று அன்னையர் தினம், உன் நியாபகம் வந்தது எனக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்” எனப் பேசியுள்ளார். இந்நிலையில், விஜய் பற்றி ஷோபா பகிர்ந்துள்ள இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.


தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாம் முறையாக விஜய் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன், சாண்டி  எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.