தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய 66-வது படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தெலங்கானா முதல்வரை சந்தித்துள்ளார்.


இது வேறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பின்னர் தற்போது தெலங்கானா முதல்வரை சந்தித்துள்ளார். 


 






தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். முதல் கட்ட ஷுட்டிங்கில் குட்டியாக ஒரு பாடல் மட்டும் சென்னையில் எடுத்து விட்டு தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் கடந்த ஒரு வாரமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.


 






முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களெல்லாம் படத்தில் இருக்கிறார்கள் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஒவ்வொன்றாக நேற்று அறிவித்து வந்தது. இதில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா ஆகியோரும் உடன் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இவர்களுடன் நடிகர் யோகிபாபு மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண