2021-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம். இந்திய அளவில் 2021-ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான படங்களின் பட்டியலில் மாஸ்டர் படம் இடம்பிடித்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிகண்ட தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு அந்தப் பட்டியலில் 6-வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படம் IMDb பட்டியலில் 4-வது இடத்திலும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் 7-வது இடத்திலும் உள்ளது. அந்த பட்டியலில் இடம்பிடித்த படங்களில் பட்டியல் பின்வருமாறு.,




1. மாஸ்டர் 
2. ஆஸ்பிரண்ட்ஸ்  
3. தி வைட் டைகர் 
4. த்ரிஷ்யம் 
5. நவம்பர் ஸ்டோரி 
6. கர்ணன் 
7. வக்கீல் சாப் 
8. மகாராணி 
9. க்ராக் 
10. தி கிரேட் இந்தியன் கிட்சன் 






மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான நிலையில் மாஸ்டரின் வெளியீட்டுக்கு முன்பே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் விஜய். பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில். அடுத்தபடியாக தளபதி 66 குறித்த சுவாரசிய அப்டேட் ஒன்று வெளியானது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் அடுத்த படத்தில் பணியாற்ற நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!


வம்சி பைடிபள்ளியின் அடுத்த படம் இருமொழிப்படமாக இருக்கும் என்ற தகவலும் இணையத்தில் வலம்வருகின்றது. தளபதி 66-ஆக  உருவாகவுள்ள இந்த படத்தை ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வம்சி பைடிபள்ளி தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், மகேஷ் பாபு என்று பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் படங்களை இயக்கியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான முன்னா என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக களமிறங்கினார்.