நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார். 


இந்த நேர்காணலை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எடுத்து இருக்கிறார். அப்போது அவர் விஜயிடம், ஏன் 10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காமல் இருந்தீர்கள்? இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் ,


விஜயின் பதில் 


“நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் நான் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தேன். ஆனால் அது வேறு விதமாக எழுதப்பட்டது. அதை நான் பார்க்கும் போது நான் சொன்னதற்கு மாறாக இருக்கிறதே என்று நினைத்தேன். அதைப்பார்த்த பலர் ஏன் இப்படி நக்கலாக பதில் சொன்னீர்கள் என்று கேட்டனர். அன்றிலிருந்து நான் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் பாடல் வெளியீட்டு விழாக்களில் குட்டி குட்டி ஸ்டோரிகளை சொல்லி பேசிவிடுவேன் “ என்றார் .