மதுரை விமான நிலையத்தில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனின் காரை, பாஜகவினர் மறித்து காலணி வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் செலுத்திய பிறகு பாஜக கட்சியினர் செலுத்துமாறு, அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 




இதையடுத்து அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது, அமைச்சரின் காரில் பாஜகவினர் காலணி வீசி தாக்கினர். உடனே அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பாஜகவினரை அப்புறப்படுத்தி, அமைச்சரின் காருக்கு வழி ஏற்படுத்தினர். இதையடுத்து அமைச்சர், அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண