நடிகர் சூர்யாவின் 2 D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய உறுப்பினர்களாக ராஜசேகர் பாண்டியன், நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளனர். மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், 36 வயதினிலே, ஜாக்பாட், பசங்க 2 , பொன்மகள் வந்தாள், சூரரை போற்று, கார்கி, விருமன், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.    


"ஜெய் பீம்" வழக்கு :


தற்போது  2 D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள "விருமன்" திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் இருந்து நடிகை ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ஜோதிகா & சூர்யா வழங்கும் என்றும் தான் வெளியிடுவார்கள். ஆனால், விருமனில் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டுள்ளது. 






ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் "ஜெய் பீம்". இப்படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன என்ன கூறி இயக்குனர் ஞானவேல் ராஜா மீதும் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிராக சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா மனு தாக்கல் செய்தனர்.  அவர்களின் மனுவில் "இது நிஜ வாழ்க்கை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட கதை, அவைகளின் உண்மையான சித்தரிப்பு அல்ல என்றும் படத்தின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டது" என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 



பெயர் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்:


இந்த "ஜெய்பீம்" வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் சூர்யா தனது மனைவி ஜோதிகாவின் பெயரை 2 D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தில்  இருந்து நீக்கியிருக்கலாம். இதனால் பிற்காலத்தில் ஜோதிகா பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். சூர்யாவின் தயாரிப்பில் "விருமன்"என்ன தலைப்பிடப்பட்டதற்கு இதும் ஒரு காரணமாக இருக்கலாம் எனபது ரசிகர்களின் கூற்று. 


வருமான வரி சோதனையில் இருந்து காப்பாற்றவா?


மேலும் ஒரு சிலர் வருமான வரி சோதனை என்பது இப்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் வருமான வரி குறித்து  பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் ஜோதிகா விசாரிக்கப்படலாம் என்பதால் ஜோதிகாவின் பெயரை 2 D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தில் இருந்து நீக்கியிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன. ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டதற்கு இப்படி பல காரணங்கள் கூறப்பட்டாலும் இவை அனைத்தும் யூகங்களே. இதற்கான ஒரு விளக்கம் கூடிய விரைவில் 2 D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.