கில்லி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.


கில்லி


விஜய் மற்றும்  த்ரிஷா காம்போவில் சூப்பர்ஹிட் ஆன படம் கில்லி. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இந்த ஆண்டோடு 20 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால் இப்படம் திரையரங்ககளில் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் மீண்டும் வெளியாகிறது என்கிற தகவல் வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் முட்டி மோதி படத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். சென்னை கமலா திரையரங்கில் முன்பதிவு தொடங்கய வெறும் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் டிக்கேட்கள் விற்றுத் தீர்ந்தன. தற்போது திரையரங்கில் ரசிகர்களை ஆர்வாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள்.






விஜய் இன்ட்ரோ , பிரகாஷ் ராஜின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் , தனலட்சுமியாக த்ரிஷா , வித்யாசாகரின் இசையில் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் என படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்க உரிமையாளர்களை அலறவிட்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைதளம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன.






தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, சிங்கப்பூர் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கில்லி படம் வெளியாகியுள்ளது. பாரிஸில் விஜய் ரசிகர்கள் விஜய் அறிமுக காட்சியை கொண்டாடும் வீடியோ சமுக வலைதளத்தில் வெலியாகியுள்ளது.






 


சிங்கப்பூரில் கில்லி படத்திற்கான அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.