காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். சங்கரின் மனைவி பெயர் இந்திரா. இவர்கள் இருவருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் உள்ளார். தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு தனது குடும்பத்துடன் சங்கர் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்.

 

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விஜய் ரசிகர் என்பதால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் அருகே சென்றுள்ளனர்.  அப்பொழுது விஜய் எப்படியாவது பார்த்து விடலாம் என விஜய் வீட்டு வாசலில் சென்ற பொழுது மிகப்பெரிய கேட் ஒன்று பூட்டி இருந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமரா முன் தன்னை எப்படியாவது பார்க்க வருமாறு கெஞ்சி கொண்டிருந்துள்ளார் சங்கரின் மகள் தமிழ்ச்செல்வி. தம்பி சங்கர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோவில் உங்களை பார்க்க வேண்டுமே என்னை எப்படியாவது பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என சிசிடிவி காட்சி மூலம் மாணவி தமிழ்ச்செல்வி அட்ரஸ் சிட்டி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.