சினிமா பிரபலங்கள் பொது இடங்களுக்கு வரும்போது ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொள்வதும், புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் சில ரசிகர்கள் அதையும் தாண்டி தான் விரும்பும் அந்த நடிகர் மீதான அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணி சில விரும்பத்தகாத அல்லது அத்துமீறிய செயலில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. 


விழாவில் பதறிய விஜய் தேவரகொண்டா!


இந்நிலையில், சமீபத்தில் நடந்த படத்தின் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா  கலந்துகொண்டார். அப்போது அவருடைய வெறித்தனமான ரசிகர்கள் சிலர் திடீரென மேடைக்கு ஒடிச்சென்று விஜய் தேவரகொண்டாவின் காலில் விழுந்தனர். இதைப் பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா ரசிகரின் இந்த செயலால் தெறித்து ஓடினார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






நடிகர் விஜய் தேவர்கொண்டா நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார்.  இவர் நடித்த கீதா கோவிந்தம், டாக்சி வாலா போன்றவை பெரிய அளவிலான வசூலைக் குவித்த திரைப்படங்கள் ஆகும்.  அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த விஜய் தேவரகொண்டாவுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.


குஷி திரைப்படம் 


தற்போது, இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் குஷி. இதில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.


சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.  இதனை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'குஷி' படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான, 'சாகுந்தலம்' மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'லைகர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தராத நிலையில், ரசிகர்கள்  இப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.